என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை சகோதரிகள்"

    • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • சகோதரிகள் 2 பேரும் கோவில்பட்டியில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் திடீரென ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி:

    மதுரையை சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று இரவு துண்டு பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

    மத்திய அரசின் ரூ.10.72 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடியை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், டாஸ்மாக்கை மூட வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர்களிடம் பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் அவதூறாக பேசி தங்களை தாக்க முயற்சி செய்ததாகவும், அங்கு வந்த போலீசாரும் பா.ஜ.க.வினருக்கு துணையாக இருந்தது மட்டுமின்றி, தங்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவதூறாக பேசியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதைக்கண்டித்து சகோதரிகள் 2 பேரும் கோவில்பட்டியில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் திடீரென ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து சகோதாரிகள் கூறுகையில், எங்களுடைய கோரிக்கைகளை ஜனநாயக முறைப்படி மக்களிடம் கொண்டு செல்கிறோம். ஆனால் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் போலீசாரும் எங்களை அவதூறாக பேசினர் என்றனர்.

    சகோதரிகளின் தர்ணா போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்தது. அவர்களது போராட்டத்திற்கு 5-ம் தூண் அமைப்பின் நிறுவனர் சங்கரலிங்கம் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    ×