என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் புகார் மனு"
- ஜெ.ஊத்துப்பட்டியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர்.
- பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும் என மனு கொடுத்தனர்.
கொடைரோடு:
கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசுக்கு சொந்தமான இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர்.
அவற்றை அகற்றுவது குறித்து மனு அளிக்கப்பட்டது. ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் சிவராமன் அளித்த புகாரின்பேரில் 2 தெருக்கள் மட்டும் சர்வே செய்யப்பட்டு ஒரு கோவில் தடுப்புச்சுவர் உள்பட 14 இடங்கள் பட்டியலை வருவாய்த்துறையினர் கொடுத்தனர்.
ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைதொடர்ந்து சமாதானகூட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பவுன்தாய் காட்டுராஜா முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ கணேசன், ஊராட்சித்துணைத்தலைவர் சிவராமன் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஆக்கிரமிப்புகளை முழுவதும் அளந்து அகற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி துணைத்தலைவர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.
இதனைதொடர்ந்து பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும் என மனு கொடுத்தனர். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.






