என் மலர்
நீங்கள் தேடியது "கழிவுநீர் கால்வாய் சேதம்"
- பொதுமக்கள் மறியல்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி அருகே உள்ள ரங்காபுரம் மூலக்கொல்லை செல்லும் சாலை சந்திப்பில் இன்று காலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கால்வாய் சேதம்
இது பற்றி தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில்:-
மூலக்கொல்லை மாதா கோவில் தெரு வழியாக கல்குவாரி லாரிகள் அதிகம் செல்வதால், கழிவு நீர்க் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையின் முகப்பிலேயே கழிவுநீர் குளம்போல அப்படியே தேங்கி நிற்கிறது.
லாரிகள் தெருவழியாக அதிக வேகத்தில் செல்வதால் வீடுகள் முழுவதும் மாசு படிகிறது.வீதியில் நடமாட முடியவில்லை.
இந்த பகுதியில் முறையாக கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். கல் குவாரி லாரிகளால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க லாரிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிட மறுத்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் இன்று காலை ரங்காபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






