என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள தடுப்புச் சுவர்"

    • குடியாத்தத்தில் ரூ.2.98 கோடியில் கட்டப்படுகிறது
    • பூமி பூஜை செய்து கட்டும் பணிகள் தொடக்கம்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் செல்லும் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் இரு புறமும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி இருந்தனர்.

    இதனால் ஆற்றில் வெள்ளம் செல்லும் போது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி வந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் அகற்றப்பட்டது.

    தற்போது தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட கவுண்டன்யா மகாநதியின் இருபுற கரைகளிலும் தலா 2.5 கிலோமீட்டர் நீளம் மொத்தமா 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டப்படுகிறது.

    மீண்டும் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் நடைபெறா வண்ணம் அளவீடு செய்யப்பட்டு இரு புறங்களும் இந்த வெள்ள தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது.

    ரூபாய் 2 கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டவுள்ள வெள்ள தடுப்புச் சுவருக்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. இந்த பூமி பூஜை விழாவில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராஜன் கலந்து கொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தனர். 

    ×