என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்தாய்வுக்குழு கூட்டம்"

    • ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • பேருந்து நிலையங்கள், ெரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட அளவில் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்க ளுடனான ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பி ற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து, தகவல்களை ஒருங்கிணைத்து, தருமபுரி மாவட்டத்தின் நகர, வட்டார, கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் சுவர் விள ம்பரங்கள், விழிப்புணர்வு பதாகைகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட வைகள் கொண்டு விழிப்புணர்வு மற்றும் விளம்பர பணிகளை குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தை தொழி லாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பள்ளி இடைநின்ற குழந்தைகளை படிப்பை தொடர செய்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொ டுமைகளை தடுத்தல் போன்ற சமூகத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வுகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் நகர, வட்டார, கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களின் மூலம் ஏற்படுத்திட வேண்டும்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகார்களை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்பதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ெரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×