என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கரும்பு சாகுபடி தீவிரம்"

    • பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால், விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • நாமக்கல், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் 1000- க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்சமயம் 80 சதவீதம் செங்கரும்புகள் நன்கு விளைந்துள்ளன.

    அன்னதானப்பட்டி:

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள் தங்கள் வீடுகளில் செங்கரும்பு, மஞ்சள் குலைகள் வைத்து, வர்்ண தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் பச்சரிசியிட்டு, பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு படையலிட்டு வணங்கி வருவது மரபுவழி வழக்கம் ஆகும். 

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால், விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. இதேபோல் கோவை, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் செங்கரும்பு பரவலாக விளைவிக்கப்படுகிறது. 

    இது குறித்து சேலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    ஒவ்வொரு வருட மும் பொங்கல் பண்டிகை யையொட்டி செங்கரும்பு சாகுபடி தீவிரமாக நடைபெறுவது வழக்கம். சேலம் மாவட்டத்தில் மல்லூர், பனமரத்துப்பட்டி, வலசையூர், வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தாரமங்கலம், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் செங்கரும்பு பயிர் செய்யப்படுகிறது. 

    இதேபோல் நாமக்கல், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் 1000- க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்சமயம் 80 சதவீதம் செங்கரும்புகள் நன்கு விளைந்துள்ளன. இந்த கரும்புகள் பொங்கல் பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு முன்பே அறுவடை செய்யப்படும். இதைத்தொடர்ந்து இங்கிருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது".

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×