என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Is the lake full? ஏரி நிரம்புமா?"

    • 12.16 ஹெக்டேர் (30 ஏக்கர்) பரப்பளவில் பாப்பான் ஏரி அமைந்து உள்ளது.
    • போதிய மழை இல்லாத தாலும், நீரோடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிப் போனதாலும், பாப்பான் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் போனது. இதனால், கடந்த 2005-க்கு பின் 17 ஆண்டுகளாக ஏரி நிரம்பவில்லை.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன் நகரில் 12.16 ஹெக்டேர் (30 ஏக்கர்)

    பரப்பளவில் பாப்பான் ஏரி அமைந்து உள்ளது.

    சேசன்சாவடி, வெள்ளாள குண்டம் மற்றும் முத்தம்பட்டி அமனாக்கரடு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகளால் இந்த ஏரி நீர்வரத்து பெறுகிறது.

    17 ஆண்டாக நிரம்பவில்லை

    போதிய மழை இல்லாத தாலும், நீரோடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிப் போனதாலும், பாப்பான் ஏரிக்கு நீர்வரத்து இல்லா மல் போனது. இதனால், கடந்த 2005-க்கு பின் 17 ஆண்டுகளாக ஏரி நிரம்பவில்லை. வறண்டு கிடந்த இந்த ஏரியில், தேசிய நெடுஞ்சாலை அமைக்க மண் வெட்டி எடுக்கப்பட்டதால், நீர்பிடிப்பு பகுதி குண்டும் குழியுமாக மாறியது.

    தூர்வாரப்பட்டது

    இந்நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன் வாழப்பாடி நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் வாயிலாக, பாப்பான் ஏரிக்கு வரும் முத்தம்பட்டி நீரோடை சீரமைக்கப்பட்டது. ஏரியின் வடமேற்கு பகுதியும் துார்வாரப்பட்டது. இதனால் கடந்தாண்டு பெய்த மழையால், ஏரியில் தண்ணீர் தேங்கியது. ஆனால் முழு கொள்ளளவையும் எட்டவில்லை. ஓரண்டாக அவ்வப்போது மழை பெய்ததாலும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததாலும், ஏரி முழுவதும் வறண்டு போகாமல் ஓரளவு தண்ணீர் தேங்கி இருந்தது.

    நீர்மட்டம் உயர்ந்தது

    நிகழ்வாண்டில், கடந்த இரு மாதங்களாக நல்ல மழை பெய்து வருவதால், ஏரியில் நீர் ஊற்று ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பாப்பான் ஏரி முழு கொள்ளளவையும் எட்டி நிரம்புமான என விவசாயிகள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

    பாப்பான் ஏரி உபரிநீர் வெளியேறும் வாய்க்கால், வருகால், மறுகால் மற்றும் ஏரிப்பாசன வாய்க்கால்களை தூர்வாரி புதுப்பிக்கவும், ஏரி மற்றும் வாய்க்கால்களில் பாக்குத்தோல் உள்ளிட்ட

    குப்பைகள் கொட்டு வதை தடுக்கவும், பொதுப்ப ணித்துறை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பசுமை அறக்கட்டளை சமூக ஆர்வலர் பழனிசாமி மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×