என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக மண் தின விழா"

    • வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்தது
    • விவசாயிகளுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கினர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது.

    வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆர். விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நத்தம் பிரதீஷ் மேல்ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாராஜ்குமார், துணைத் தலைவர் ராஜி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சூரியகலாமனோஜ்குமார் செல்விபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடியாத்தம் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர். உமாசங்கர் வரவேற்புரை ஆற்றினார். அமலுவிஜயன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ஆகியோர் விவசாயிகளுக்கு‌ மண் பரிசோதனைக்கான அடையாளச் சான்றிதழ்களை வழங்கினர்.

    மேல்ஆலத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் என்.ஏ.சரவணன், தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.லட்சுமணன், மண் பரிசோதனை நிலையம் மூத்த வேளாண்மை அலுவலர் எஸ்.சிங்காரவேல், மங்களூர் கெமிக்கல் அண்ட் பெர்டிலைஸ் வேலூர் மேலாளர் எம்.கோபால் ஆகியோர் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உரை ஆற்றினார்.

    உதவி வேளாண்மை அலுவலர் ஜெயகாந்தன் செயல் விளக்கமளித்தார். முடிவில் வேளாண்மை அலுவலர் ஆர்.அன்பழகன் நன்றி கூறினார்.

    ×