என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் அளவீடு செய்யும் பணி"

    • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றிய, மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்றைய தினம் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும், பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    அரசின் திட்டங்களை துறை அலுவலர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி அப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதற்குரிய தீர்வையும் கண்டறிந்து அத்திட்டத்தினை காலதாமதமின்றி விரைவாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். தருமபுரி - மொரப்பூர் புதிய ெரயில்வே இணைப்பு பாதை அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    எனவே, தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு துறை தலைவர்கள் முக்கியத்துவம் அளித்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

    இதில் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராமதாஸ், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×