என் மலர்
நீங்கள் தேடியது "விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்"
- அதிகமான காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு காய்கறிகளையும் முழுமையாக அழித்து விடுகிறது.
- காட்டுப்பன்றிகளை விரட்ட மின் வேலி அமைத்தாலும் அதில் சிக்கி இறக்கும் காட்டுப்பன்றிகள் மற்றும் மற்ற விலங்ககுளால் விவசாயிகள் குற்ற வழக்குகளில் சிக்கும் அபாயமும் உள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் அதிகமான மக்கள் விவசாயத்தையே முழுமையாக செய்து வருகின்றனர். கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் விளையும் நிலங்களில் அதிகமான காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு காய்கறிகளையும் முழுமையாக அழித்து விடுகிறது.
இதனால் மன்னவனூர் ஊராட்சிக்குட்பட்ட கவுஞ்சி கிராமப்பகுதியில் அறுவடைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் விளைந்திருந்த கேரட் பயிர்களை காட்டுப்பன்றிகள் அதிகமான நஷ்டம் ஏற்படும் வகையில் நாசம் செய்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ெதரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய விளைநிலங்களில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விரட்ட மின் வேலி அமைத்தாலும் அதில் சிக்கி இறக்கும் காட்டுப்பன்றிகள் மற்றும் மற்ற விலங்ககுளால் விவசாயிகள் குற்ற வழக்குகளில் சிக்கும் அபாயமும் உள்ளது.
இது போன்ற பிரச்சினைகள் இல்லாமல் மேல்நிலை கிராம விவசாயிகளின் விவசாயத்தை அழிக்கும் காட்டுபன்றி போன்ற விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இது வரை வன விலங்குகளால் ஏற்பட்ட நஷ்டத்தினை விவசாயிகளுக்கு பெற்றுத்தரவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்






