என் மலர்
நீங்கள் தேடியது "பூனை மீசை மூலிகை"
- ரக துளசி, ஜாவா தேயிலை என குறிப்பிடப்படும் பூனை மீசை மூலிகை, சிறுநீரக உபாதைகள், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களை தீர்க்கும் சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
- இந்த பூனை மீசை மூலிகை, உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
வாழப்பாடி:
சீரக துளசி, ஜாவா தேயிலை என குறிப்பிடப்படும் பூனை மீசை மூலிகை, சிறுநீரக உபாதைகள், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களை தீர்க்கும் சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்த மூலிகைத் தாவரத்திற்கு நல்ல வரவேற்பும், கூடுதல் வருவாயும் கிடைப்பது தெரிய வந்ததால், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, வாழப்பாடி அடுத்த விலாரிபாளையம், மோட்டூர், இடையப்பட்டி, தும்பல், கத்திரிப்பட்டி, தாண்டானுார், பனைமடல் ஆரியபாளையம் களரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஏறக்குறைய 200 ஏக்கர் பரப்பளவில் பூனை மீசை மூலிகையை பயரிட்டு வருகின்றனர். தேயிலையை போல அறுவடை செய்யப்படும் இந்த மூலிகை இலையை உலர வைத்து பதப்படுத்தும் விவசாயிகள், சேலம், இடையப்பட்டி, கொட்டவாடி பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வியாபாரி களுக்கு எடை போட்டு விற்பனை செய்து வந்தனர்.
இந்த பூனை மீசை மூலிகை, உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்பட்டு வந்தது. ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ.120 வரை விலை கிடைத்து வந்ததால், பூனை மீசை மூலிகை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், கடந்த 2 மாதமாக, இந்த மூலிகையின் தேவை குறைந்து போனதாகவும், விலை குறைந்து விட்டதாகும் கூறிய வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டனர். இத னால், இந்த மூலிகையை பயிரிட்டுள்ள விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பல விவசா யிகள், இந்த மூலிகை பயிர்களை அழித்து விட்டு மாற்று பயிர் செய்து வருகின்றனர்.






