என் மலர்
நீங்கள் தேடியது "அறவழி போராட்டம் RELIGIOUS PROTEST TOMORROW"
- நாளை அறவழி போராட்டம் நடத்தப்படும் என எஸ்.டி.பி.ஐ.யின் மாநில தலைவர் பேட்டி அளித்துள்ளார்.
- பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை
பெரம்பலூர்
பெரம்பலூரில், மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று (நாளை செவ்வாய்க்கிழமை) பாசிச எதிர்ப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் அறவழி போராட்டத்தை நடத்துகிறோம். ஜனநாயக அடிப்படையில் நடத்தப்பட்ட அநீதிக்கு, நீதி வேண்டி இப்போராட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதியரசர் அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றம் புரிந்த 17 காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை இல்லை. குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இது தி.மு.க. அரசின் இரட்டை நிலையை காட்டுகிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் படுகொலைக்கு காரணமான, குற்றம் புரிந்த அனைத்து அதிகாரிகளும் சட்டப்படி பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






