என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு CALL FOR ATHLETES TO RECEIVE GRANTS"

    • விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    அரியலூர்:

    சிறப்பு உதவித்தொகை பெற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    அரியலூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் ஆகிய மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    மேலும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்த விவரங்களுக்கு இணையதளம் மற்றும் ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 7401703499 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    ×