என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.78 லட்சம் மோசடி"

    • மாவட்ட குற்ற பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • பணி நியமன ஆணைகள் போலியானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் அருகேயுள்ள அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த சுதாகர் மற்றும் 26 பேர் மாவட்ட குற்ற பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

    அதில் போச்சம்பள்ளியை சேர்ந்த யாரப்பாஷா, கிருஷ்ணகிரியை சிறந்த சண்முகம், வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரகுகுமார் ஆகியோர் அரசு வேலை வாங்கித்தருவதாக தங்களிடம் ரூ.78 லட்சத்து 74 ஆயிரம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், அவர்கள் கொடுத்த பணி நியமன ஆணைகள் போலியானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×