என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூலகம் சீரமைப்பு"

    • அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
    • மாணவர்களின் அறிவை வளர்க்க நூலகங்கள் இன்றியமையாதது என பேச்சு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் மணியம்பட்டு ஊராட்சியில் 1990-ம் ஆண்டு கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆணை குழு மாவட்ட கிளை நூலகம் பழுதடைந்து கிடந்தது.

    இந்த நூலகத்தை சிப்காட் திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் ரூ.16.70 லட்சம் நிதியிலும் மற்றும் மல்லாடி டிரக்ஸ் நிறுவனம் ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டிலும் அரசு பங்களிப்பு ரூ.16.81 லட்சம் ஆக மொத்தம் ரூ.41.80 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்டது.

    இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:-

    தமிழக முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மரியாதைக்குரிய கா.அன்பழகன் அவர்களால் இந்த கிளை நூலகம் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

    பழமை வாய்ந்த கட்டிடத்தை தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்த நூலகத்தை சிறப்பாக சீரமைத்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மாணவர்களின் அறிவை வளர்க்க நூலகங்கள் இன்றியமையாதது.

    ராணிப்பேட்டையில் உள்ள பிஞ்சி ஏரி ரூ.45 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஏரியில் உள்ள மண்ணை அகற்றி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கு ரூ.1.40 கோடி நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் தொடங்கப்பட்டு அதற்கு சமூக பங்களிப்பு நிதி தேவை என மல்லாடி நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக ரூ.60 லட்சத்தை வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு மிகுந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் சிவகுமார், செயற்பொறியார் சொக்கலிங்கம், உதவி செயற் பொறியார் திரிபுர சுந்தரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சரஸ்வதி, முருகன், நூலகட் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×