என் மலர்
நீங்கள் தேடியது "பைக்கை திருட முயன்ற கும்பல்"
- சி.சி.டி.வி. கேமரா காட்சியால் வாகனம் தப்பியது
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த ரகுநாதபுரத்தில் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று ஜெபக்கூட்டம் நடந்தது.
ஜெப கூட்டத்திற்கு வந்தவர்கள் வெளியே வாகனங்களை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர். தேவாலயத்தின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மர்ம கும்பல் வெளியே நிறுத்தியிருந்த பைக்கை திருட முயன்றனர். இதனை கண்காணிப்பு கேமராவில் கண்ட வாகன உரிமையாளர் வெளியே வந்தார். அப்போது மர்ம கும்பல் வாகன உரிமையாளரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் வாகன உரிமையாளர் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருட முயன்றவர்களை தேடி வருகின்றனர்.






