என் மலர்
நீங்கள் தேடியது "தேனீ கொட்டி பாதிப்பு"
- காயமடைந்த ஆசிரியை வேலூர் மருத்துவமனைக்கு மாற்றம்
- பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் நேரில் ஆறுதல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முக்குன்றம் ஊராட்சி காத்தாடி குப்பம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு வெளியே பெரிய புளியமரம் உள்ளது அந்த புளிய மரத்தில் தேனீக்கள் தேன்கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விளையாட்டுத்தனமாக தேன்கூடு மீது கல் வீசினர். அப்போது தேனீக்கள் பள்ளிக்குள் புகுந்து பள்ளியில் இருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் சரமாரியாக கொட்டியது.
மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த கிராம மக்கள் உடனடியாக மாணவர்கள் மற்றும் ஆசிரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
பள்ளி ஆசிரியர் ஜெயந்திக்கு அதிக அளவு தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய நிலையில் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் டி.சிவா உள்ளிட்டோர் தேனீக்கள் கொட்டியதால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.






