என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ேபாட்டிகள்"

    • அரசு பள்ளிகளில் கலை திருவிழா ேபாட்டிகள் நடைபெற்றது
    • மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஒன்றிய அளவில் கலைத் திருவிழா நடைபெற்றது.

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவை, நகர் மன்ற தலைவர் சாந்திகலைவாணன் தொடக்கி வைத்து பேசினார். இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டார்.

    இதே போல், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற கலைவிழாவை ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடக்கி வைத்து, படிப்புடன் இதர திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். விழாவில், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்குபெறுவர்.

    ×