என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீண்ட நேர மாகியும் வெளியே வரவில்லை"

    • தீயணைப்பு வீரர்கள்
    • குளித்தபோது மணலில் சிக்கினான்

    ஆரணி:

    ஆரணி அடுத்த அரையாளம் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (வயது15), 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து நேற்று தச்சூர் செய்யாறு ஆற்றுப்பகுதியில் குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது மணிகண்டன் திடீரென தண்ணீரில் மூழ்கினார். நீண்ட நேர மாகியும் வெளியே வராததால் நண்பர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து தேடியுள்ளனர்.

    இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேர தேடுதலுக்கு பிறகு மணலில் சிக்கி இருந்த மணிகண்டனை பொதுமக்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×