என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை நடை பயணம்"

    • தூய்மை நடை பயணம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சி இறுதியில் ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் நன்றி உரை வழங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காட்டாகரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு முழு சுகாதாரத்தை நோக்கி மக்களின் பயணம் என்ற பெயரில் தூய்மை நடை பயணம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர் கஜேந்திரன், சுகாதாரத்துறை ஆய்வாளர் கந்தவேல், மற்றும் வார்டு உறுப்பினர்கள் அஜய்குமார் , புனிதவதி சங்கர் , நித்யா சரவணன், பிரபு, லட்சுமி சக்திவேல், சின்ன பாப்பா, தர்மன், பாலமுருகன், வேலு, காயத்ரி, சுமன் , தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் நன்றி உரை வழங்கினார்.

    ×