என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூழ்கி பலியான 10 வயது சிறுமி"

    • குட்டையின் அருகே தோழியுடன் விளையாடி கொண்டி ருந்தார்.
    • நைனா ஸ்ரீ தவறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள அலேசீபம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர்.திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் நைனா ஸ்ரீ (வயது 10). இவர் அதே கிராமத்தில் உள்ள ஆங்கிலப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று நைனா ஸ்ரீ வீட்டின் அருகே உள்ள குமார் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் உள்ள குட்டையின் அருகே தோழியுடன் விளையாடி கொண்டி ருந்தார்.

    அப்போது நைனா ஸ்ரீ தவறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இதை அறிந்த அக்கம் பக்கத்தவர் இறந்த நைனாஸ்ரீ உடலை மீட்டனர். பின்பு ஓசூர் அரசு மருத்துமனைக்கு மாணவியின் உடலை உத்தனப்பள்ளி போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×