என் மலர்
நீங்கள் தேடியது "குமரி கடற்கரை கிராமங்கள்"
- திருப்பலியும் நடந்தது
- ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
நாகர்கோவில்:
உலக மீனவர் தின விழா இன்று குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமன் துறை கடற்கரை கிராமத்தில் விழா நடைபெற்றது. முதலில் கடற்கரையில் பங்கு பணியாளர் சகாய வில்சன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து கடலில் மலர் தூவி பால் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான் தலைமை வகித்தார். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடலில் மலர் தூவி பால் ஊற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் பிரடி கென்னடி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் ஷேக் முகமது, அருள்ராஜ், சுனில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பால்மணி, ஆரோக்கிய ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏழை மீனவர்களுக்கு நிழற்குடை, மீன் விற்கும் பாத்திரங்கள் உட்பட நலஉதவிகளை விஜய் வசந்த். எம்.பி வழங்கினார்.
மீனவர் தினத்தை யொட்டி குளச்சல் கடற்கரை யில் கடல் அன்னைக்கு மலர் தூவி பிராத்தனை செய்யப்பட்டது. விசை படகுகள், வள் ளங்கள் மீன் பிடிக்க செல்ல வில்லை. நிகழ்ச் சிக்கு காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை டைனிசிஸ் லாரன்ஸ் விசை படகுகளுக்கும், கட்டு மரங்களுக்கும் பிராத்தனை செய்து கடல் அன்னைக்கு மலர் தூவி பிராத்தனை செய்தார்.
நிகழ்ச்சிக்கு விசை படகு சங்க தலைவர் பிரான்சிஸ், துணை தலைவர் வர்கீஸ், செயலாளர் பிராங்கிளின், காணிக்கை மாதா ஆலய உதவி செயலாளர் ரெக்ஸன், வியாபாரிகள், ஏலக்காரர்கள் அமைப்பு மற்றும் விசைப்படகு சங்கத் தினர், பொதுமக்கள், ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மணக்குடி அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணியப்பன் தலைமையில் இன்று காலை திருப்பலி நடந்தது. இணை பங்கு தந்தை சுவீடன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கடற்க ரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வள்ளம் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது.கடலில் மீனவர்கள் மலர் தூவியும் வழிபட்டனர்.
பள்ளம் புனித மத்தேயூ ஆலயத்தில் பங்கு தந்தை சூசை ஆண்டனி தலைமை யில் திருப்பலி நடந்தது. இதை தொடர்ந்து கடற்கரையில் மீன்பிடி உபகரணங்கள் அர்ச்சிப்பு செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் இன்று சிறப்பு பிரார்த்தனை யில் ஈடுபட்டனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் கடற்கரை பகுதிகள் வெறிச் சோடி காணப்பட்டது.