என் மலர்
நீங்கள் தேடியது "ஆபத்தான பயணம் செய்யும் தொழிலாளர்கள்"
- பெரும்பாலான சமயங்களில் அரசு பஸ் நிறுத்தப்படுவதாலும் தாமதமாக வருவதாலும் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.
- இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கானல்காடு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி போன்ற பகுதிகளில் காபி, மிளகு, ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், நெல்லூர், சித்தரேவு போன்ற தரைப்பகுதியிலிருந்து ஏராளமான கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.
வத்தலகுண்டுவிலிருந்து பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை வழியாக தாண்டிக்குடிக்கு காலை முதல் மாலை வரை அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
பெரும்பாலான சமயங்களில் அரசு பஸ் நிறுத்தப்படுவதாலும் தாமதமாக வருவதாலும் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். பெரும்பாறை, தாண்டிக்குடி மலைப்பாறை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. இந்த குறுகிய சாலையில் மினி லாரிகளில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணம் செய்கின்றனர்.
இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று கூட ஜீப் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர். அடிக்கடி விபத்துகள் நடந்து வந்த போதிலும் ஆபத்தை உணராமல் தொழிலாளர்கள் சரக்கு வேன்களில் பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






