என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரச மரத்தில் தீ"

    • 90 ஆண்டு பழமையான மரம்
    • தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை வ.உ.சி தெருவில் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சுமார் 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் உள்ளது. அதில் இணைந்து வேப்ப மரமும் வளர்ந்து உள்ளது.

    இந்த அரசமரம் அடியில் நாக தேவதைகளின் சிலைகள் உள்ளன இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசமரம் அடியில் உள்ள நாக தேவதைகளுக்கு விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு பக்தர்கள் ஏற்றி வைத்த விளக்கு எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பழமையான அரச மரத்தில் பற்றி உள்ளது அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது அரச மரத்திலிருந்து தீ கொழுந்து விட்டு எரிந்தபடி இருந்தது.

    இது குறித்து உடனடியாக கோவில் நிர்வாகி சங்கர் மற்றும் கோயில் குருக்கள் சேகர் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக விரைந்து வந்த கோவில் நிர்வாகியும் குருக்களும் கோவிலை திறந்தனர். அதற்குள் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அரச மரத்தின் ஒரு பகுதியில் பலத்த சேதம் அடைந்துள்ளது.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் இந்த அரசமரம் அதிகாலை நேரத்தில் பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.

    ×