என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி சாதனை"

    • ஜூடோ விளையாட்டு போட்டி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • தாவரவியல் பிரிவின் 3-ம் ஆண்டு மாணவி அனிதா 63 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் பெரியார் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஜூடோ விளையாட்டு போட்டி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இதில் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாவரவியல் பிரிவின் 3-ம் ஆண்டு மாணவி அனிதா 63 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.

    வெற்றி பெற்ற விளை யாட்டு வீராங்கனைக்கு கல்லூரியின் முதல்வர் தனபால் வாழ்த்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் மாணவிக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி பேராசிரியர் விஜய் ஆனந்த் மற்றும் பிரேமா ஆகியோரையும் கல்லூரி முதல்வர் பாராட்டினார். சாதனை படைத்த மாணவியை கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்தினார்கள்.

    ×