என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரில் குட்கா கடத்தியவர் கைது"

    • போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • காரை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 299 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஜங்சன் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பட்டு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 299 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் 2.56 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் தெலுங்கானா மாநிலம், ஹதராபாத்தை சேர்ந்த நாகேஷ் தேவசி (வயது32) என்பவரை கைது செய்தனர். கார் மற்றும் குட்காவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×