என் மலர்
நீங்கள் தேடியது "கோவை அரசு மருத்துவ கல்லுாரி"
- முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியது.
- ‘ராகிங்’ கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியது.
புதிய மருத்துவ மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போலவே மருத்துவ கல்வி இயக்கம் ஜீன்ஸ், டிசார்ட் அணிய தடை உள்ளிட்ட பல கட்டுபாடுகளை விதித்துள்ளது.
கோவை அரசு மருத்துவ கல்லூரியில் நடப்பாண்டில் மொத்தம் 200 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியது.
இதனையொட்டி இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.வரவேற்பு நிகழ்ச்சியில் கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா மற்றும் பலர் பங்கேற்றனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கோவை அரசு மருத்துவ கல்லூரியை குறித்தும், கல்லூரியின் நடைமுறை, கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.முதலா மாண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கல்லூரியிலும், மாணவர் விடுதியிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்ய கூடாது என சீனியர் மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராகிங் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு தேவையான வசதி கள் ஏற்படுத்திக் கொடு க்கப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று, இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலா மாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியது. இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு 100 இடங்கள் உள்ளது. இந்த மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று காலை இ.எஸ்.ஐ.யில் நடந்தது.






