என் மலர்
நீங்கள் தேடியது "Children’s Day Festival"
- பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
- விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் தலைமை வகித்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். பொத்தனூர் அன்பழகன், கவுன்சிலர்கள் வைரமணி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






