என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் பொதுக்கூட்டம்"

    • பெங்களூரில் இருந்து பொம்மனஹள்ளி வரையில் உள்ள மெட்ரோ ரெயில்வே திட்டம் ஓசூர் வரை நீடிக்க வேண்டும் என கர்நாடகா மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையுடன் சென்று கர்நாடக முதலமைச்சர் பசராஜ் பொம்மை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
    • தொகுதி மக்களுக்கு சேவையாற்றவே உள்ளேன்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி. மாவட்டம் ஓசூர் அடுத்து தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தமிழ்நாடு காஸ் கட்சியினுடைய மாநில செயலாளர் வீரமுனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி நாடாளு மன்ற தொகுதியில் நான் வேட்பாளராக அறிமுகம் செய்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தேர்தல் வாக்குறுதி வழங்கினேன். அந்த வாக்குறுதியானது. கடந்த சுமார் 75 ஆண்டு காலமாக நிலையிலுள்ள ெரயில்வே திட்டம் செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தேன்.

    தவறும் பட்சத்தில் ஓர் ஆண்டுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என அறிவித்தேன். ஓர் ஆண்டு காலம் ஆகியும் நிறைவேற்றுவதற்குள் கொரோனா தொற்று நோய் காலம் நெருங்கியதால் காலதாமதமானது இருப்பினும் ெரயில்வே திட்டத்தைப் பற்றி ெரயில்வே மத்திய அமைச்சர் மற்றும் நிர்வாகத்திடம் கலந்து பேசி உள்ளேன். நான் மத்திய ெரயில்வே துறை அமைச்சரிடம் வலியுறுத்ததின் பேரில் ரூ.2 கோடி 45 லட்சம் ஒதுக்கீடு செய்து சர்வே செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    எந்த விவாத மேடையிலும் குற்றவாளி கூண்டில் ஏறி நான் விவாதிக்க தயாராக உள்ளேன். எந்த காலகட்டத்திலும் ெரயில்வே திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு உள்ளேன்.

    மேலும், பெங்களூரில் இருந்து பொம்மனஹள்ளி வரையில் உள்ள மெட்ரோ ெரயில்வே திட்டம் ஓசூர் வரை நீடிக்க வேண்டும் என கர்நாடகா மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையுடன் சென்று கர்நாடக முதலமைச்சர் பசராஜ் பொம்மை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் விரைவில் தமிழக அரசு ஒப்புதலோடு செயல்படுத்தப்படும். அதுமட்டுமில்லாமல் பழுதடைந்துள்ள திண்டிவனம் சாலையை மத்திய அமைச்சரிடம் நேரில் அணுகி திட்டம் 80 சதவீத பணி நிறைவு பெறும் வகையில் உள்ளது.

    ஒரு சிலர் தவறான தகவல்கள் தெரிவித்து வருகின்றனர். தொகுதி மக்களுக்கு சேவையாற்றவே உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் எஸ். காசிலிங்கம் ஜேசு துரைராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி. சேகர், கிருஷ்ணகிரி மேற்குமாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஹரிஷ் பாபு கிர்த்தி கணேஷ் டி.எம். சீனிவாசன் பிரபாகரன், ஓ பி சி குமார், மகளிர் அணி சரோஜாம்மாள், இளைஞர் காங்கிரஸ் அணில் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பிரதாப், சுரேஷ், எம் டி செல்வம் தங்க பாண்டியன் பர்கத், முனுசாமி ரெட்டி, முரளி உள்பட பண கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தேன்குஅன்வர் வரவேற்றார். முடிவில் தேன்கனிக்கோட்டை நகர தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.

    ×