என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழன்னை விருது"

    • வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் பேச்சு
    • தமிழ்ச் சான்றோர்களுக்கு தமிழன்னை விருது

    வேலூர்:

    உலகத்தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் வேலூர், லட்சுமி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரங்கில் முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் தி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    வி.ஐ.டி. வேந்தர் டாக்டர்விசுவநாதன் அவர்கள் தமிழ்ச் சான்றோர்களுக்கு தமிழன்னை விருதுகள் வழங்கினார்.

    திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ராஜா பஸ் சர்வீஸ், குழுமம் நா.சுப்பிரமணி, ஆனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் பெரியண்ணன், தமிழ்த் தன்னுரிமை இயக்கம் பாவலர் மு.இராமச்சந்திரன், ஊரீசு கல்லூரி முதல்வர் ஆ.நெல்சன் விமலநாதன், ஊரீசு கல்லூரி பேராசிரியர் பி.கு.திருஈன்பஏழிலன், கவிஞர் இரா.சீனிவாசன், கோவை தமிழ் இலக்கிய பாசறை கோவை கிருஷ்ணா ஆகியோருக்கு விருதுகள்வழங்கப்பட்டன.

    மேலும் பள்ளியில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சான்றிதழ், பரிசு களை வேந்தர் விசுவநாதன் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசினார்.

    வேந்தர் சிறப்புறையில்:-

    மாணவர்கள் தாய்மொழியை தவறு இல்லாமல் பேசவும் படிக்கவும் கற்க வேண்டும். மொழிகள் பலவும் கற்பது தவறு இல்லை. தாய்மொழியை முதலில் கற்ற பிறகு வேற்று மொழியை கற்க வேண்டும். உலகில் 6 மொழிகளில் செம்மொழி தமிழ்தான் இன்றும் மாறாமல் உள்ளது. தமிழில் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    செம்மொழிகளில் தமிழ் மூத்த மொழியாகும். உலகில் மூத்த குடியும் தமிழர்கள் தான். நமது தாய்மொழியை நாம் போற்றி வளர்க்க வேண்டும். உலகின் அதிகமான நாடுகளில் தமிழர்கள் தான் வாழ்கிறார்கள். தமிழர்கள் பெயர்கள் தூய தமிழில் இருக்க வேண்டும். அதற்கு நாம் வழிவகை செய்யவேண்டும். தமிழை நாம் வளர்க்க வேண்டும் என்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக திரைச்செம்மல் விருது பெற்ற கலைப்புலி ஏஸ்.தாணு அவர்கள் சிறப்புரை யாற்றினார். லட்சுமி வரவேற்று பேசினார்.

    உலகத் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவர் தமிழ் புகழேந்தி அறிமுக உரையாற்றினார். முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், உலகத்தமிழ் வளர்ச்சி மன்றம் துணைத்தலைவர் அப்புபால் வி.எம்.பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் மன்ற செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, ஆ.ஆண்ட்ரூஸ், முன்னாள் துணை மேயர் வி.டி.தருமலிங்கம், கட்டுமான தொழிலாளர் அமைப்பு தலைவர் ஆர்.டி.பழனி, சித்தார்த்தர் பள்ளி தாளாளர் முனைவர் ஜெ.விக்னேஷ்குமார், பொறியாளர் என்.பி.தனிகைவேலன், அன்னை மீரா கல்லூரி தாளாளர்கள் எஸ்.ராமதாஸ், ஜி.தாமோதரன், வங்கி மேலாளர் மா.கல்யாணசுந்தரம், கல்வி உலகம் பள்ளி தாளாளர் த.வ.சி.சிவபெருமான், தலைமை ஆசிரியர் (ஓய்வு) சந்திரசேகர், சித்தார்த்தர் பள்ளி தமிழாசிரியை வி.சாந்தி, நா.அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழாசிரியை வி.சாந்தி தொகுத்து வழங்கினார். இன்பஏழிலன் நன்றி கூறினார்.

    ×