என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்டிக்கடைகாரர் கைது"

    • குட்காவை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • குட்காவை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் பெட்டிக் கடையில் குட்காவை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர்.

    ×