என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுதி நேரம்"

    • 46-வது வார்டில் நடைபெற்ற பகுதி குழு கூட்டத்தில் தீர்மானம்
    • 46-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 46-வது வார்டில் பகுதி குழு கூட்டம் கீழவண்ணான்விளை வேங்கை நற்பணி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீரசூரபெருமாள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 46-வது வார்டுக்குட்பட்ட மிகவும் மோசமான அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பனிடுவது, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது, தெரு விளக்குகளை பராமரிப்பது, கீழவண்ணான்விளையில் பகுதி நேர ரேசன் கடை அமைத்து தருவது, என்.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் மக்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது, வடக்குசூரங்குடி சின்னகுளத்திற்கு செல்லும் கழிவுநீரை தடுப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் சுகாதார ஆய்வாளர் ராஜா, பகுதி குழு உறுப்பினர்கள் நாகேந்திரன், சந்திரசேகர், ஸ்ரீராம், முருகன், கீழவண்ணான்விளை ஊர் தலைவர் சுந்தரேசன், வேங்கை நற்பணி மன்ற தலைவர் ராஜாஜி மற்றும் 46-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×