என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயம் மும்முரம்"
- மானாமதுரை பகுதியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வைகைஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- கண்மாய் கரை பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை பாசன பகுதியாகும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக வைகைஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கண்மாய் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் நிரம்பி வருகிறது. பார்த்திபனூர் மதகு அணையில் இடதுபுற கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் பெரிய கண்மாய்யாக உள்ள மேலெநெட்டூர் கண்மாய் தற்போது நிரம்பி மறுகால் பாய்கிறது.
கண்மாய் கரை பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து செல்லும் கால்வாய்களிலும் தண்ணீர் அதிகம் அளவில் செல்கிறது. இப்பகுதியில் தொடர்ந்து பலகண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
வைகை ஆற்று கரை யோரம் உள்ள முத்தனேந்தல், கிருங்காகோட்டை, கீழமேல் குடி மானாமதுரை கண்மாய்களுக்கு வரும் கால்வாய், மதகுகள் பராமரிக்கப்படாதால் தண்ணீர் வராத நிலையும் உள்ளது. தற்போது தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் வீணாக சென்று கடலில் சென்று கலக்கும் தண்ணீரையும் விவசாயம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் வைகைஆற்றில் புதிதாக தடுப்பணை கட்ட வேண்டும். தண்ணீர் செல்லாத கால்வாய்களில் சீரமைப்பு மற்றும் மராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






