என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர்களுக்கு வலைவீச்சு"
- சேலம் தாதகாப்பட்டியில் மதுகுடித்ததை தட்டிக்கேட்ட அரசு அதிகாரி தாக்கப்பட்டார்.
- இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பொம்மன செட்டிக் காடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஓபிலி விஜய் ( வயது 25). இவர் சேலம் மாநகராட்சியில் கொண்டலாம்பட்டி மண்டலம் 58- வது டிவிஷன் மூணாங்கரடு பகுதி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு 8 மணி அளவில் மூணாங்கரடு அடுத்த செல்லக்குட்டி காடு பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் 3 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அதிகாரி ஓபிலி விஜய், அந்த வாலிபர்களை இந்த பகுதியில் மது குடிக்கக் கூடாது. உடனடியாக இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், ஓபிலி விஜய்யை தாக்கினர். இது குறித்து அவர், அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு அதிகாரியை தாக்கிய வாலிபர் சேனை ( 22) உள்பட 3 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.






