என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது"

    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் போலியோ மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தியது.

    பேரணிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.மேகராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ரோட்டரி சங்க ஆளுநர் கே.ஜவுரிலால்ஜெயின், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் எம்.கோபிநாத், வி.என். அண்ணாமலை, என்.எஸ். குமரகுரு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே.சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி கலந்து கொண்டார்.

    போலியோ மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை அமலு விஜயன் எம்.எல். ஏ., நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவத் துறை இணை இயக்குனர் எம்.கண்ணகி, துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன்பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் என்.சத்தியமூர்த்தி, டாக்டர் எம்.எஸ்.திருநாவுக்கரசு, வி.நாராயணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவர் வி.குமரவேல் நன்றி கூறினார்.

    ×