என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank officer’s wife"

    • மதுரையில் வங்கி அதிகாரி மனைவியிடம் 20 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    ஆத்திகுளம் ஏஞ்சல் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவர் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி (வயது 58).

    நேற்று மதியம் இவர் நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். நரிமேடு பள்ளி அருகே பானுமதி நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் கும்பல் வழிமறித்து செயின் பறிப்பில் ஈடுபட்டது.

    மூதாட்டி நகைகளை காப்பாற்றுவதற்காக போராடினார். ஆனாலும் பலனில்லை. எனினும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல், பானுமதி அணிந்திருந்த 20 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது.

    இதுகுறித்து பானுமதி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளின் பதிவெண் மற்றும் குற்றவாளிகள் 2 பேர் பற்றிய அடையாளம் தெரியவில்லை. எனவே தல்லாகுளம் போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×