என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம்"
- திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தல்
- போக்சோ சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த குருவராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 22) இவர், 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப் படுத்தியுள்ளார். இதற்கு மறுத்த சிறுமியை வீட்டை விட்டு வெளியே வரும் போது திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் கடத்தி சென்றார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் சிறுமியை கண்டுப்பிடித்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நவின்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






