என் மலர்
நீங்கள் தேடியது "தடையை மீறி பட்டாசு வெடித்ததாக போலீசார் 85 வழக்கு பதிவு"
- வேலூர் போலீசார் அதிரடி நடவடிக்கை
- காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது
வேலூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது.
2 ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் இருந்த பொதுமக்கள் தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடினர். புத்தாடை அணிவித்தும் இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.
வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பல இடங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தனர். குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 52, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12, திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
4 மாவட்டங்களில் மொத்தம் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.






