என் மலர்
நீங்கள் தேடியது "கழிவு நீர் மறுசுழற்சி"
- தமிழ்நாட்டில் முதல்முறையாக அமைகிறது
- தினமும் 30 ஆயிரம் லிட்டர் கழிவு நீரை மறுசுழற்சி சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தில் 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் மறு சுழற்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
மறு சுழற்சி சுத்திகரிப்பு நிலையம்
இந்த கழிவுநீர் மறு சுழற்சி சுத்திகரிப்பு நிலையம் தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் முதல்முறையாக குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது .
தினமும் 30 ஆயிரம் லிட்டர் கழிவு நீரை மறுசுழற்சி சுத்திகரிப்பு செய்து பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதில் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்துகொண்டு கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையத்தின் இயந்திரங்களை இயக்கி வைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் பி.சிசில்தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ மோகன், அன்வர்பாஷா, ஏ.தண்டபாணி, எம்.எஸ்.குகன், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






