என் மலர்
நீங்கள் தேடியது "பெங்களூரு வாலிபர் கைது"
- ரூ.60 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
- கைது செய்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அருகேயுள்ள அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் பாரத் (வயது 20). சம்பவத்தன்று ஓசூர் ரிங்ரோடு சாலையில் முனீஸ்வரர் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் கத்தியை கட்டி காட்டி மிரட்டி பாரத் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் பாரத் புகார் தந்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தபோது பாரத்திடம் செல்போனை பறித்து சென்றது கர்நாடக மாநிலம் பெங்களூரு துவாரகா நகரை சேர்ந்த சீனிவாசா (19) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து பாரத்திடம் ஒப்படைத்தனர்.






