search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டியிடம் கொள்ளை"

    • அரசு பஸ்சில் நூதன முறையில் மூதாட்டியிடம் கொள்ளையடித்த 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பொழுது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாகபஸ்ஸில் ஏறிய 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    விழுப்புரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் எம் டி. சி நகர், வாரி தெருவை சேர்ந்த சர்தார் என்பவரின் மனைவி ஆயிஷா.

    இவர் நேற்று மாலை தனது உறவினர் வீட்டிற்கு அரசு பேருந்தில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பஸ் விக்கிரவாண்டி அடுத்த சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த பொழுது பஸ்சில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆயிஷாவின் அருகில் வந்து சில்லறை காசுகளை கீழே போட்டுவிட்டு ஆயிஷாவிடம் எங்க சில்லறை காசு கீழே விழுந்து கிடக்கிறது என்று சொல்லஆயிஷா குனிந்து அந்த சில்லறை காசுகளை எடுக்கும் பொழுது பொழுது அவருடைய பேக்கில் இருந்து மணிபர்சை எடுத்துக் கொண்டனர் .

    இதுதெரிந்து ஆயிஷா சத்தம் போட்டவுடன் பஸ் சுங்கச்சாவடி கடந்து செல்ல உடனடியாக மர்ம நபர்கள் 6 பேர் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி ஓடினர் ஓடி மறுபுறத்தில் சென்னை மார்க்கமாக செல்லுகின்ற அரசு பஸ்ஸில் ஏறிக்கொண்டனர்.

    பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பொழுது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாகபஸ்ஸில் ஏறிய 6 பேரையும் மடக்கி பிடித்தனர். இவர்களை விக்கிரவாண்டி போலீசில் தகவல் கொடுத்த பிறகு போலீஸ்இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் ஆகியோர் அந்த ஆறு பேர்களை கைது செய்தனர். விசாரணையில் பாலு 44. சிங்க புனேரி ,சிவகங்கை மாவட்டம் .யோகராஜ் 22 கவுண்டன்பட்டி ,திருச்சி. பாண்டியன் 34 பாலக்குறிச்சி, திருச்சி,கண்ணதாசன் 24 கல்லுப்பட்டி, திருச்சி .பிரதாப் 28 என தெரியவந்தது.

    ×