என் மலர்
நீங்கள் தேடியது "அரவை எந்திரம்"
- புதிதாக வேப்பம் புண்ணாக்கு அரவை எந்திரத்தில் அரவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
- டிராக்டர் மற்றும் உரம், பயிர் மருந்து உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் கூண்டு வேன் உள்ளிட்டவை குறைந்த வாடகையில் வழங்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மெதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய டிராக்டர் மற்றும் உரம், பயிர் மருந்து உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் கூண்டு வேன் உள்ளிட்டவை குறைந்த வாடகையில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் புதிதாக வேப்பம் புண்ணாக்கு அரவை எந்திரத்தில் அரவையும் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இணை இயக்குனர் ஜெய்ஸ்ரீ, துணைப் பதிவாளர் ராஜநந்தினி, மெதுர் சசிகுமார் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






