என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் மாயம்"

    • நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனீஸ் கார்த்திகா டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • தினமும் மதியம் வேலைக்கு சென்று விட்டு இரவு அனீஸ் கார்த்திகா வீட்டிற்கு வருவது வழக்கம்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே கற்காடு சிவா நகரை சேர்ந்தவர் நெல்சன் (வயது 63).

    இவர் ரெயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மகள் அனீஸ் கார்த்திகா (27). இவர் நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். தினமும் மதியம் வேலைக்கு சென்று விட்டு இரவு அனீஸ் கார்த்திகா வீட்டிற்கு வருவது வழக்கம்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற அனீஸ் கார்த்திகா வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அனீஸ் கார்த்திகா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவரது தந்தை நெல்சன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மாயமான டாக்டர் அனீஸ் கார்த்திகாவின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ×