என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க. BJP"

    • தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிதான் நடைபெறும் என்று மாநில பொதுச் செயலர் தெரிவித்துள்ளார்.
    • பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், அரசியலில் தகுதியுள்ள கட்சி என்றால் அது பா.ஜ.க. மட்டுமே. இக்கட்சியில் ஊழல் கிடையாது, வாரிசு அரசியல் கிடையாது. தமிழகத்தில் எதிர்ப்புகளை கடந்து பா.ஜ.க. வளர்ச்சி பெற்று வருகிறது.

    எனவே இக்கட்சியை வலுவாக இயக்கமாக மாற்ற வேண்டும் என்றால் அனைத்து கிளைகளிலும் இளைஞர்களை சேர்க்க கட்சியினர் பாடுபட வேண்டும். அப்படி பாடுபட்டால் தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் பா.ஜ.க. தான் ஆட்சி புரியும் என்றார். மு ன்னதாக அவர் கட்சியின் செயல்பாடுகள், உறுப்பினர்களை சேர்ப்பது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் சந்திரசேகர், மாநில செயற் குழு உறுப்பினர்கள் அய்யாரப்பன், நடராஜன், மாவட்ட பொது செயலாளர்கள் அருன்பிரசாத், மகாலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் நகரத் தலைவர் மணிவண்ணன் நன்றி தெரிவித்தார்.

    ×