என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலியுக வரதராஜ பெருமாள் கோவில்"

    • அரியலூர் மாவட்டம் கல்லக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
    • பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் கல்லக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலியுக வரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×