என் மலர்
நீங்கள் தேடியது "பயனாளிகள் தோ்வு"
- இலவச வீட்டு வீட்டுமனை பட்டாவுக்கு பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.
- மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இனத்தவா்களுக்கு பட்டா வழங்கும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் மூலமாக வீடற்ற ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்த ப்பட்டோா் இனத்தவா்களுக்கு நில எடுப்பு செய்து இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. பட்டா வழங்குவதற்கான பயனாளிகள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
அதனடிப்படையில் நிலமற்ற ஏழை மக்கள், ஊரக வளா்ச்சித் துறையின் வீடற்றோா் பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்பங்கள், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகளை உறுப்பி னா்களாக கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோா் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
சிறப்பு இனங்களில் வசிக்கும் வீடற்றவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சி யரிடம் பெண்கள் பெயரில் மனுச் செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.