என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரியில் பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்"

    • பா.ஜனதா பட்டியல் அணியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
    • மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.ரவி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில பொறுப்பாளர் கோபி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இதில், கிருஷ்ணகிரியில் மாலை நேரத்திலும் உழவர் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், பா.ஜனதா நிர்வாகிகள் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் பட்டியல் அணி பொதுச் செயலாளர் திருமுகம், முருகம்மாள், கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் சந்தியா, துணை தலைவர்கள் சக்தி, பாரதி மற்றும் மாவட்ட செயலாளர் வேலன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×