என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு"

    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    கணியம்பாடி அருகே உள்ள ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாரதி வர்மன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆற்காட்டான் குடிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 67 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஏற்கனவே 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஒரே வகுப்பறையில் 8 வகுப்புகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியில் சத்துணவு சமைக்கப்படுகிறது. இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை கட்டப்படவில்லை.

    இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் குடிநீர் தொட்டி கட்டக்கூடாது என்று ஆட்சேபனை செய்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பள்ளிக்கூடத்தை சீர்குலைக்கும் வகையில் குடிநீர் தொட்டி கட்டுவது சரியான நடைமுறை ஆகாது.

    உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.ஆற்க்காட்டான் குடிசை கிராமத்தில் பல ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதில் குடிநீர் தொட்டி கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×