என் மலர்
நீங்கள் தேடியது "அமரிந்தர்சிங்"
- உட்கட்சி பிரச்சினையால், காங்கிரசில் இருந்து விலகினார்.
- தனிக்கட்சி தொடங்கிய நிலையில் பஞ்சாப் தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர்சிங், உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார். பின்னர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. தனது சொந்த தொகுதியான பாட்டியாலாவில் அமரிந்தர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் பாஜகவில் இணைவது குறித்து அவர் ஆலோசித்து வந்தார். அதன்படி டெல்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து முறைப்படி அவர் பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது. தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் அவர் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






