என் மலர்
நீங்கள் தேடியது "சவர தொழிலாளர் சங்கம்"
- மாநகர மாவட்ட தலைவர் ஜீவமதி சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
- சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சிவானந்தம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் :
தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கம், திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பாக திருப்பூர் பூங்கா நகரில் உள்ள சங்க அலுவலகமான சிவானந்தம் அரங்கில் உலக முடித்திருத்துவோர் தின விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்க பொருளாளர் என். எஸ். செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில சங்க முதன்மை துணைத் தலைவர் கந்தவேல் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் கே. வடிவேல் வரவேற்று பேசினார். மாநகர மாவட்ட தலைவர் ஜீவமதி சங்க கொடியை ஏற்றி வைத்தார். சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சிவானந்தம் உருவப்படத்திற்கு அறக்கட்டளை தலைவர் மு. சக்திவேல், எம். சுப்பிரமணியம், மாநகர சங்க அமைப்புச் செயலாளர் எம். ராஜேந்திரன், மாநகர மாவட்ட சங்க துணைத் தலைவர்கள் வி. வெள்ளச்சாமி, வி. சண்முகம், எஸ். சுரேஷ்பாலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் துணைச்செயலாளர்கள் ஆர். சூர்யா, பி. தீனா. கே. செந்தில்குமார் உட்பட அனைத்து கிளை நிர்வாகிகள், மற்றும் அனைத்து கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் துணை தலைவர் சபரீஸ்வரன் நன்றி கூறினார்.






